கொழும்பு – புத்தளம் ரயில் சேவை நாளை மீண்டும் ஆரம்பம்
கடந்த 53 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த நீர்கொழும்பு முதல் புத்தளம், பாலவி வரையான ரயில் சேவைகள் நாளை 19ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
பத்துளுஓயா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் சுமார் 200 அடிக்கும் அதிகமான ரயில் பாதை முற்றாகச் சேதமடைந்திருந்தது.
ரயில்வே திணைக்கள ஊழியர்களின் தொடர்ச்சியான சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து, இந்தப் பராமரிப்புப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.
இதற்கமைய, நாளை காலை முதல் வழமை போன்று பாலவி வரை அலுவலக ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.





