உலகம் செய்தி

காசாவில் பேரவலம் – மருத்துவ இடமாற்றத்திற்காக காத்திருந்த 1,268 பேர் பலி

எகிப்துடன் இணைந்துள்ள ரஃபா எல்லைக் கடவை (Rafah border crossing), வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே திறக்கப்படுவதால், ஆயிரக்கணக்கான நோயுற்ற மற்றும் காயமடைந்த பலஸ்தீனியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அவசர மருத்துவ சிகிச்சை பெற காத்திருப்பதாக கூறப்படுகிறது.

ரஃபா கடவைஆறு மணி நேரம் மட்டுமே செயல்படும் என்றும், ஒரு நாளில் 150 பேர் மட்டுமே காசாவிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இஸ்ரேல், தெரிவித்துள்ளது.

இதேவேளை 50 பேர் மட்டும் காசாவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

ரஃபா கடவை மூடப்பட்டிருந்த காலத்தில், மருத்துவ இடமாற்றத்திற்காக காத்திருந்த 1,268 பேர் காசாவில் உயிரிழந்ததாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், உடனடியாக அதிகமானவர்களுக்கு வெளியேற அனுமதி வழங்கப்படாவிட்டால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக இதுவரை 70,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 171,483 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!