சிங்கப்பூரில் கட்டுமான ஊழியர்கள் மூவருக்கு நேர்ந்த துயரம்
சிங்கப்பூரில் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் மின்னல் தாக்கியதில் மூன்று கட்டுமான ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பார்ட்லி பீக்கன் BTO கட்டுமான தளத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து HDB கழகம் தகவல் தெரிவித்தது.
மழை பெய்யும் போது, அந்த 3 ஊழியர்களும் கட்டுமானத் தளத்தில் ஒரு பிளாக்கின் கூரையில் வேலை செய்து கொண்டிருந்தனர் என தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்த HDB கழகம் கூறியுள்ளது.
மழையின் பெய்ய தொடங்கியபோது ஊழியர்கள் பாதுகாப்பு இடத்திற்கு செல்ல முற்பட்டபோது, அவர்கள் இருந்த பகுதிக்கு அருகில் மின்னல் தாக்கியதாக HDB கூறியது.
மின்னல் தாக்கியதை அடுத்து, ஊழியர்கள் தலைசுற்றுவதாக தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மவுண்ட் வெர்னான் சாலையில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட இரண்டு ஊழியர்கள் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் மற்றொருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் கொண்டுச் செல்லப்பட்டனர். விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.