ஜப்பானில் எரிமலை அருகே மாயமான சுற்றுலா ஹெலிகாப்டர் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்!
ஜப்பானின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் அசோ (Mount Aso) அருகே, சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று மாயமாகியுள்ளது.
அசோ நகரில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் இருந்து நேற்று புறப்பட்ட குறித்த ஹெலிகாப்டரே இவ்வாறு மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிமூட்டமான வானிலை காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று காலை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஹெலிகாப்டர் முந்தைய பயணங்களில் சீராக இருந்ததாக அதன் ஆப்ரேட்டர் டகுமி எண்டர்பிரைஸ் (Takumi Enterprise) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டகுமி எண்டர்பிரைஸ் (Takumi Enterprise) அதன் அனைத்து ஹெலிகாப்டர்களையும் தரையிறக்கியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





