இத்தாலியில் படகு கவிழ்ந்து விபத்து – பலரை காணவில்லை
இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள மேகியோர் ஏரியில் (Lake Maggiore) சுற்றுப்பயணிகளை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகளை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்ற நிலையில் 19 பேர் காப்பாற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் சிலரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார். அவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உடல் மீட்கப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
லிசான்ஸா (Lisanza) நகரில் அந்தச் சம்பவம் நடந்தது. பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அந்த 16 மீட்டர் நீளப் படகில் 23 சுற்றுப்பயணிகள் உட்பட 25 பேர் இருந்தனர். மேகியோர் ஏரி இத்தாலியின் 2ஆவது ஆகப் பெரிய ஏரியாகும். அது பிரபலமான சுற்றுலாத் தளம் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)