வாழ்வியல்

பெண்களின் கவனத்திற்கு..! மாதவிடாய் சமயத்தில் அவதானம்

மாதவிடாய் சமயங்களில் என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்,சாப்பிடக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.

பொதுவாகவே பெண்கள் மாதவிடாய் சமயங்களில் பல்வேறு விதமான உடல் ரீதியான பிரச்சனைகளை மேற்கொள்வதுண்டு. மாதவிடாய் சமயங்களில் கை கால் வலி, முதுகு வலி, வயிற்றில் வலி போன்ற பிரச்சனைகள் பொதுவாக ஏற்படும். இதனால் பெண்கள் அந்த சமயங்களில் மிகவும் சோர்வாக இருப்பதுண்டு.

இருப்பினும், மாதவிடாய் சமயங்களில் பெண்கள் என்னென்ன உணவை சாப்பிட வேண்டும், என்னென்ன சாப்பிட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தற்போது இந்த பதிவில் என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்,சாப்பிடக் கூடாது என்பது பற்றி பார்ப்போம்.

Best Foods to Eat During Menstruation

சாப்பிடக் கூடிய உணவுகள்

மஞ்சள்

மாதவிடாய் சமயங்களில் உணவில் சிறிதளவு மஞ்சள் சேர்ப்பது நல்லது. ஏனென்றால், மஞ்சளில் குர்குமின் உள்ளது. மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் , இது தசைப்பிடிப்புகளை குணப்படுத்துவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

turmeric

இரும்புச்சத்துள்ள உணவுகள்

மாதவிடாய் சமயங்களில் பெண்கள் இரும்புச்சத்து நிறைந்த பொருட்களை உண்ணுவது நல்லது. குறிப்பாக, உளுந்து, வெல்லம், பீன்ஸ், கீரை மற்றும் டார்க் சாக்லேட் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலில் இரத்த சோகை பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் இரத்தம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

iron

வாழைப்பழம்

பொதுவாகவே நாம் வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. அதிலும் பெண்கள் மாதவிடாய் சமயங்களில் வாழைப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வாழைப்பழத்தில் வைட்டமின் 6 மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்க இது செயல்படுகிறது. வாழைப்பழத்தை வைத்து ஸ்மூத்திகள் சாப்பிடலாம்.

banana

மூலிகை தேநீர்

மூலிகை டீயில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்த டீ குடிப்பதால் மன அழுத்தம் குறைவது மட்டுமின்றி, புத்துணர்ச்சியோடு இருக்க உதவுகிறது. மேலும், இது நமது உடல் உறுப்புகள் ஆரோக்கியமான முறையில் இயங்க உதவுகிறது.

tea

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் எண்டோர்பின்கள் உள்ளன. இது ஒரு வகையான மகிழ்ச்சியான ஹார்மோன். மகிழ்ச்சியான ஹார்மோன் உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது.

dark chocolate

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சர்க்கரை

மாதவிடாய் சமயங்களில் அதிக சர்க்கரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சர்க்கரை அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இந்த சமயங்களில் ஐஸ்கிரீம், மிட்டாய் மற்றும் கேக் போன்றவை அடங்கும்.

பாஸ்ட்புட் உணவுகள்

இன்று அதிகாமாக நாம் விரும்பி உண்ணக் கூடிய பாஸ்ட்புட் உணவுகள் நமது உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய ஒன்றாகும். எனவே இந்த உணவுகளை தவிர்த்து வீட்டில் செய்யக் கூடிய உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது. அதே போல் நொறுக்குத்தீனி உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. இந்த உணவுகள் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

உப்பு அதிகமான உணவுகள்

பொதுவாகவே நாம் உணவு உட்கொள்ளும் போது உணவில் குறைவான அளவு உப்பை சேர்த்துக் கொள்வது நல்லது. கடைகளில் விற்கக்கூடிய உப்பு அதிகமாக உள்ள பொறிகள் போன்ற உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது.

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான

You cannot copy content of this page

Skip to content