சன் டிவியை உச்சத்துக்கு கொண்டு செல்லும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவாங்கி…

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’யின் வெற்றியைக் கண்டு சன் டிவி ஆரம்பித்த நிகழ்ச்சிதான் ‘டாப் குக் டூப் குக்’.
‘சிவாங்கி’ என்றால் இசை நிகழ்ச்சியில் கால் பதித்து, சமையல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று இன்று அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்தவர். அனைவரின் தனித்துவமான பாடும் திறமை மற்றும் நகைச்சுவையான தன்னிச்சையான தன்மை அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது.
அந்த வகையில் சிவாங்கிக்கு பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி என்றே சொல்லலாம்.
விஜய் டிவியில் இருந்து வெளியேறிய செஃப் வெங்கடேஷ் பட் ‘டாப் குக் டூப் குக்’ நிகழ்ச்சியில் முக்கியமான ஒரு நடுவராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டவ சிவாங்கி தான்.
விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த சிவாங்கி தற்போது சன் டிவிக்கு மாறி உள்ளார்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பெற்ற வரவேற்பை போல் ‘டாப் குக் டூப் குக்’ ஷோவை டாப் நிகழ்ச்சியாக மாற்ற களமிறங்கிய சிவாங்கி அதில் வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறவேண்டும்.
அதிலும் இதில் கலந்துகொண்ட இலங்கையரான வாகீசனால் குறித்த நிகழ்ச்சி வெற்றியின் உச்சத்துக்கே சென்றது. அனைவரும் இதை பார்த்து வருகின்றார்கள்.
அந்த வகையில் புதிய புரோமோவில் நிகழ்ச்சியில் ஒரு புதிய குக் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அனைவரும் பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டு இருக்க அதிரடியாக முன்னால் வந்து நின்றார் சிவாங்கி. இவர் தனது அம்மாவுடன் இந்த போட்டியில் ஒரு குக்காக களமிறங்க உள்ளார்.
இதனால் இந்த நிகழ்ச்சி இன்னும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது..