4,000 ஆண்டுகள் பழமையான மனித கைரேகைகளுடன் கூடிய கல்லறை கண்டுப்பிடிப்பு!

4,000 ஆண்டுகள் பழமையான எகிப்திய கல்லறை ஒன்று மனித கைரேகைகளுடன் கண்டறியப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த தொல்பொருள் களிமண் தகட்டால் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கிமு 2055 முதல் 1650 வரையில் வாழ்ந்திருக்கக்கூடும் என யூகிக்கப்படும் மனிதரின் கைரேகை அதில் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்டோபர் 3 ஆம் தேதி ஃபிட்ஸ்வில்லியம் அருங்காட்சியகத் திறப்பு விழாவில் பல்கலைக்கழகத்தின் பண்டைய எகிப்தில் தயாரிக்கப்பட்ட கண்காட்சியில் இது காட்சிப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
“எகிப்தியப் பொருளில் இவ்வளவு முழுமையான கைரேகையை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை.” என ஃபிட்ஸ்வில்லியம் அருங்காட்சியகத்தின் மூத்த எகிப்தியலாளர் திருமதி ஸ்ட்ருட்விக் தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 3 visits today)