இலங்கை செய்தி

திருமலை புத்தர் சிலை விவகாரம்: சந்தேக நபர்களுக்கு மறியல் நீடிப்பு!

பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்குரிய விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.

திருகோணமலை கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதன்போது பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களுக்கு ஆதரவாக இன்றைய தினமும் நீதிமன்றத்துக்கு வெளியில் ஒரு சிலர் திரண்டிருந்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!