திரேட்டரில் அடிவாங்கிய தக் லைஃப்-க்கு ஓடிடியில் நடந்தது என்ன?

கடந்த வாரம் ஓடிடி-யில் நிறைய படங்கள் வெளியானது. இதில் அதிக பார்வையாளர்களை கடந்த படங்களை இப்போது பார்க்கலாம்.
ஐந்தாவது இடத்தில் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான Heads Of State படம் இடம் பிடித்திருக்கிறது.
இந்த இடத்தில் நான்காவது இடத்தில் உப்பு கப்பரம்பு படம் இடம் பெற்றிருக்கிறது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான இந்த படம் நேரடியாகவே அமேசான் பிரைமில் வெளியானது. காமெடி ஜானரில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.
அடுத்ததாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கமல், சிம்பு நடிப்பில் வெளியான தக் லைஃப் படம் வெளியானது.
இந்த படம் தியேட்டரில் காற்று வாங்கிய நிலையில் வசூலிலும் அடி வாங்கியது. ஆனால் ஓடிடியில் கிட்டத்தட்ட 25 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்றதால் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
இரண்டாவது இடத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான சேகரி சாப்டர் 2 படம் இருக்கிறது.
முதலிடத்தில் ரெய்டு 2 படம் 55 லட்சம் பார்வையாளர்களை கடந்து இருக்கிறது. இப்படம் நெட்பிளிக்சில் வெளியானது.
மேலும் தியேட்டரில் தக் லைஃப் படம் வரவேற்பு கிடைக்காமல் இருந்த நிலையில் ஓடிடியில் ரசிகர்களால் பார்க்கப்பட்டது கமலுக்கு ஆறுதலாக அமைந்து இருக்கிறது.