பொழுதுபோக்கு

கமலின் Thug Life – அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்லும் படக்குழு

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘தக் லைஃப்’ (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

‘தக் லைஃப்’ திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் அறிமுக வீடியோ எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில், ‘தக் லைஃப்’ (Thug Life) திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவின் சைபீரியா பகுதியில் நடைபெறவுள்ளதாகவும் இதில் நடிகர் கமல் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இப்படத்தில் கமலுக்கு ஜோடி யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், யாரும் இல்லை என்ற செய்தியும் வெளிவருவதால் கமல் ரசிகர்கள் சற்று கவலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content