உலகம்

பிரித்தானியாவில் கோர விபத்து! 3 இளைஞர்கள் பலி: பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டுஷயர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். .

பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டுஷயர் பகுதியில் கார் ஒன்று மரத்தின் மீது மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மார்ச்சம் கிராமத்தில் உள்ள A415 சாலையில் கார் ஒன்று சாலையை விட்டு வெளியேறி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இரண்டு 18 வயதுடைய இளைஞர்கள் மற்றும் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு விவரங்கள் தெரிவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆறுதல் வழங்கி வருகின்றனர்.

இந்த விபத்தில் காரை ஓட்டிக் கொண்டு வந்த 18 வயது இளைஞர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விபத்தை நேரில் பார்த்த சாட்சியங்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு தேம்ஸ் பள்ளத்தாக்கு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!