அமெரிக்காவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி!
அமெரிக்காவின் புளோரிடாவில் வெள்ளையர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 கறுப்பின மக்கள் கொல்லப்பட்டனர்.
இனவெறியின் அடிப்படையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய 20 வயது வெள்ளையர் பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புளோரிடா மாநிலத்தில் உள்ள கறுப்பின பல்கலைக்கழகம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஏதேனும் அமைப்பைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேவேளை அமெரிக்காவில் இந்த ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.





