மியான்மர் நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரான மன்டலேயில் ரிக்டரில் 7.7 அளவு பதிவான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்தன.
144 பேர் இறந்துவிட்டதாகவும் 730 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் மியான்மர் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆனால் இந்த எண்ணிக்கை பல ஆயிரங்களாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
காயம் அடைந்தவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுவதாக மியானமரின் ராணுவ அரசு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் நெடுஞ்சாலைகள் பாலங்கள் சேதம் அடைந்துள்ளன.உணவுக்கும் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
(Visited 20 times, 1 visits today)





