பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்… செக் வைத்தார் விஜய் சேதுபதி
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், இதுவரை இப்படி ஒரு பிக் பாஸ் வீட்டை பார்த்ததில்லை என மக்கள் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில், போட்டியை விறுவிறுப்பாக்க வைல்டு கார்ட் போட்டியாளர்கள் நால்வரை களமிறக்கியுள்ளனர்.
இதற்கிடையில் யார் இந்த வாரம் வெளியேறவுள்ள தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது ரம்யா தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.
வோட்டிங் அடிப்படையில் அவர் தான் கடைசியில் இருப்பதாகவும், நாளைய எபிசோட்டில் விஜய் சேதுபதி இதை அறிவிப்பார் எனவும் தகவல் கசிந்துள்ளது.
இதற்கிடையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் FJ வெளியேறுவதாகவும் கூறப்படுகிறது.
வைல்டு கார்டு போட்டியாளர்களாக 4 பேர் உள்ளே சென்றதால் ஆட்களை குறைக்கும் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரமே விஜய் சேதுபதி 2 பேரை வெளியே அனுப்ப வேண்டும் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






