பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததன் விளைவே இது: ஆஸ்திரேலியாமீது இஸ்ரேல் கடும் விமர்சனம்!
யூத எதிர்ப்பு தாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா அரசாங்கம் செயல்பட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாலஸ்தீன அரசை அங்கீகரித்ததன்மூலம் ஆஸ்திரேலிய தலைமைத்துவம் இதனை செய்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸை பலவீனமான தலைமைத்துவம் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
யூத எதிர்ப்பு புற்றுநோய் போன்றது. தலைவர்கள் அமைதியாக இருக்கும்பட்சத்தில் அது வேகமாக பரவுகின்றது.
புற்றுநோய் பரவ ஆஸ்திரேலிய தலைமைத்துவம் இடமளித்தது. அதனால்தான் யூதர்கள்மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டார்.





