வைத்தியசாலைகளின் மின்கட்டண நிலுவை தொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளது!

அரச வைத்தியசாலைகள் உட்பட சுகாதார அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களில் செலுத்தப்படாத மின் கட்டணங்களை செலுத்துவதற்கு மின்சார சபையுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த கலந்துரையாடலின்போது, மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)