6 கிலோ உடைகளை அணிந்து விமானத்தில் சென்ற அவுஸ்திரேலிய இளம் பெண்!
அவுஸ்திரேலியாவில் விமானத்தில் பயணித்த இளம் பெண் ஒருவர் 6 கிலோவுக்கு பல உடைகளை அணிந்து சென்ரத்தத்தால் சங்கடத்திற்கு உள்ளான வேடிக்கையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
19 வயதான அட்ரியானா ஒகாம்போ எனும் அப்பெண் தனது தோழியுடன் மெல்போர்னிலிருந்து அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள தனது வீட்டிற்கு ஜெட்ஸ்டார் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது கூடுதல் சாமான்களுக்கு கட்டணம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக அவர் எடுத்த தீவிர முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. மாறாக அவருக்கு விமான நிருவத்திடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது, மேலும் அவரது முயற்சி தோழிக்கும் சேர்த்து சங்கடத்தில் முடிந்தது.
அவர் அதிகப்படியான பொருட்களை தன்னுடன் எடுத்து வந்ததால், சுமந்து செல்லும் சாமான்கள் அதிகபட்ச எடை வரம்பான ஏழு கிலோவைத் தாண்டியதை உணர்ந்த பிறகு, அதிகப்படியான பேக்கேஜ் கட்டணத்தைத் தவிர்ப்பதற்காக அவர், தன்னிடமிருந்த கூடுதல் ஆடைகள் அனைத்தையும் அணிந்துக்கொண்டார்.
அட்ரியானா தன உடலில், டி-சர்ட்கள், ஜாக்கெட்டுகள், ஜம்பர்கள் மற்றும் கால்சட்டை உட்பட கிட்டத்தட்ட 6 கிலோ ஆடைகளை அணிந்திருந்தார்.தன்னால் முடிந்தவரை அணிந்த பிறகும், இன்னும் அதிக உடைகள் இருந்ததால், அவற்றை தனது தோழிக்கு அணிவித்துள்ளார்.
முடிந்த அனைத்து முயற்சிகளுக்குப் பிறகும், அவர்களின் சாமான்கள் வரம்பை விட 1 கிலோவிற்கும் அதிகமாக இருந்தது. இதனால் அவர் 65 டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று விமான நிறுவனம் கூறியது.அதுமட்டுமின்றி, அவர்கள் அணிந்த அனைத்து ஆடைகளுடனும் விமானத்தில் பயணிக்க வேண்டியிருந்தது.
ஆறு கிலோ ஆடைகளுடன் தான் கரடி போல் இருந்ததாகவும், விமான நிலையத்தில் ”வரிசையில் இருந்த அனைவரும் எங்களைப் பார்த்து சிரித்தது ஒருவித சங்கடமாக இருந்தது. மக்கள் எரிச்சலடைந்தனர், ”என்று அட்ரியானா கூறினார்.