உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு – முதல் 10 இடங்களுக்குள் நுழைந்த அமெரிக்கா!
2026 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் முதல் 10 இடங்களுக்குள் அமெரிக்க கடவுச்சீட்டு இடம்பிடித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க கடவுச்சீட்டின் செல்வாக்கு சரிவை சந்தித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் முன்னேறியுள்ளது.
இதற்கமைய அமெரிக்க கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 179 நாடுகளுக்கு பயணிக்க முடியும். ஆனால் அமெரிக்கா ஹென்லி திறந்தவெளி குறியீட்டில் மோசமான நிலையில் உள்ளது.
இதன்காரணமாக 46 நாடுகளுக்கு மாத்திரமே விசா இல்லாத அணுகல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் முதல் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. 192 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலை சிங்கப்பூர் வழங்குகின்றது.
தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த இரு நாடுகளின் கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 188 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம்.
அதேபோல் மூன்றாவது இடத்தில் டென்மார்க், லக்சம்பர்க், ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகியவை உள்ளமை குறிப்பிடத்தக்கது.





