உலகில் முதன் முதலில் தகனம் செய்யப்பட்ட பெண் : ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்!
உலகில் முதன் முதலில் தகனம் செய்யப்பட்ட உடல் ஒன்று மலாவியில் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 9500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த உடல் தகனம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹோரா 1 (Hora 1) தொல்பொருள் தளத்தில் பெண் ஒருவரை தகனம் செய்தமைக்கான எச்சங்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு, பண்டைய வேட்டைக்காரர் சமூகங்களிடையே பின்பற்றப்பட்ட சவக்கிடங்கு நடைமுறைகள் மற்றும் சமூக ஒத்துழைப்பு பற்றிய பாரம்பரிய அனுமானங்களை சவால் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
500C க்கும் அதிகமான வெப்பநிலையை உருவாக்க சுமார் 30 கிலோ மரக்கட்டைகள் மற்றும் புல்லைச் சேகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் இதனை கூட்டு முயற்சியாக முன்னெடுத்திருக்கலாம் என ஊகிக்கின்றனர்.

தகனம் செய்யப்பட்ட பெண் ஏன் இவ்வளவு தனித்துவமான சடங்கை பெற்றுள்ளார் என்பது தொடர்பிலும் ஆராய்ச்சியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதேநேரம் அந்த சமூகத்தில் அவர் மதிப்பு மிக்கவராக இருந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.





