அமெரிக்கா- சீனா இடையே பூசல் மூண்டால் உலகிற்கு காத்திருக்கும் ஆபத்து!
அமெரிக்கா – சீனா இடையே பூசல் ஏற்பட்டால் உலகின் எதிர்காலம் அடுத்த 10 முதல் 30 ஆண்டுகளுக்கு இருண்டுவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் (Ng Eng Hen) கூறியிருக்கிறார்.
உக்ரேனிலும் மத்திய கிழக்கிலும் போர் நீடிக்கிறது. உலகில் ஒரே நேரத்தில் 3 பகுதிகளில் பிரச்சினை இருப்பது மோசமானது என டாக்டர் இங் குறிப்பிட்டுள்ளார்.
60ஆவது மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய டாக்டர் இங், சொந்த நலன்களைப் பாதுகாக்க நாடுகள் செலவு செய்வதை நிறுத்த முடியாது என்றார்.
ஒப்பந்தங்கள் செய்துகொள்வதில் தவறில்லை, ஆனால் அவை அரசதந்திரரீதியாகத் தீர்வு காணவோ, பூசல்களைத் தவிர்க்கவோ செய்துகொள்ளப்பட வேண்டும் என்றார் டாக்டர் இங்.
தம்மைப் பொறுத்தவரை அதுவே ஆசியாவின் முன்னுரிமை என்றார் அவர். ஆசியாவில் பூசல் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் இங் அதை உலகத்தால் ஏற்க முடியாது என்றார்.
சிங்கப்பூருக்கு எதிரிகள் இல்லை, எனினும் நாடு தற்காப்புக்காகச் செலவு செய்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது என்று டாக்டர் இங் சீன செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.