ஆஸ்திரேலியா

கணவனுக்கு காய்கறி சூப்பில் ஆப்பு வைத்து பழி தீர்த்த பெண்!

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்த நிலையில், காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்துள்ளார்.குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஜூடித் ஆன் வென் என்பவரே தமது கணவரின் கொடுமையில் இருந்து தப்ப, சுமார் 50 மாத்திரைகளை சூப்பில் கலந்து கணவரை கொன்றவர்.

69 வயதான ஜூடித் ஆன் வென் தற்போது கணவரை கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்க இருக்கிறார். இருப்பினும், கடந்த 3 ஆண்டுகள் அவர் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்துள்ளதால், நீதிமன்றம் அவரை பரோலில் செல்ல அனுமதித்துள்ளது.

ஜூடித் ஆன் வென் தமது கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்துள்ளார். இதனால் தூக்கமின்மை, தனிமைப்படுத்தப்பட்டு அவநம்பிக்கையுடன் இருந்து வந்துள்ளார்.அத்துடன், கணவரை கவனிக்க மறுத்துள்ளார்.

அனுபவித்த சித்ரவதை... காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்த பெண் | Queensland Woman Killing Husband Vegetable Soup

இதனால் 18 மாதங்களில் அவருக்கிருந்த உளவியல் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் 20,000 டொலர் செலவிட்டு, படகு ஒன்றை லான்ஸ் வென் வாங்க, அது குடும்பத்தில் கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்தே, தமது கணவர் பயன்படுத்திவந்த மாத்திரைகளில் 50 மாத்திரைகளை சூப்பில் கலந்துள்ளார். இதில் சுருண்டு விழுந்த லான்ஸ் வென்- ன் கை நரம்பையும் ஜூடித் ஆன் வெட்டி விட, இறுதியில் உடற்கூறு ஆய்வில், மாத்திரைகள் அதிகம் உட்கொண்டதே மரண காரணம் என உறுதி செய்யப்பட்டது.

தற்போது இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், 8 ஆண்டுகள் மற்றும்6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் விசாரணைக் கைதியாக 3 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளதால், உடனடியாக பரோலில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித