சில Apple Watchகளை இறக்குமதி செய்வதைத் தடைசெய்ய அமெரிக்கா முடிவு!
சில ஆப்பிள் வாட்ச்களை இறக்குமதி செய்வதைத் தடைசெய்யும் முடிவை மீற வேண்டாம் என்று அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
மருத்துவ கண்காணிப்பு தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான மாசிமோவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தடையானது இன்று (26.12) முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில், குறிப்பிட்ட ரத்த ஆக்ஸிஜனை அளவிடும் அம்சத்தை உள்ளடக்கிய ஆப்பிள் வாட்சுகளை குறிவைக்கிறது.
தூதுவர் கேத்தரின் டாய், முழுமையான விவாதங்களுக்குப் பிறகு, சர்வதேச வர்த்தக ஆணையத்தின் (ITC) முடிவை ரத்து செய்ய வேண்டாம் என்று அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த தடை குறித்து அமெரிக்க மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஆப்பிள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)