ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய கத்திக்குத்து

ஆஸ்திரேலியா – மெல்போர்னின் ஃபிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 03.20 அளவில் புகையிரத நடைமேடையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக விக்டோரியா மாநில பொலிஸார் தெரிவித்தனர்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இந்த கத்திக் குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் 03 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், இது பயங்கரவாதச் செயல் அல்ல என்று விக்டோரியா மாநில காவல்துறை வலியுறுத்துகிறது.
(Visited 19 times, 1 visits today)