பொழுதுபோக்கு

“Zee Tamil சரிகமப” இலங்கைச் சிறுமிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு

இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளியின் மகள் ஆஷினி சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஜீ தமிழின் “சரிகமப” இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக நேற்று இந்தியா சென்றிருந்தார்.

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை – நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான ஆஷினி சென்னை விமான நிலையத்தை சென்றடைந்த பின்னர் zee தமிழ் ஊடக குழுமத்தின் சார்பில் பிரதிநிதி வந்து அவரை அலைத்துச்சென்றார்.

இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளியின் பிள்ளையொருவர் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள “சரிகமப” இசை நிகழ்வில் பங்கேற்பது மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளது.

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை, நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான அசானியை சர்வதேசம்வரை கொண்டு செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள பாடசாலை அதிபர், பிரதி அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், ஊர் மக்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்து வெற்றிகரமாக வழியனுப்பிவைத்த மேல் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சண். குகவரதனுக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலும், சென்னையில் திரையிறங்கிய பின்னரும் எடுக்கப்பட்ட படங்கள்.

தொடர்புடைய செய்தி

Zee Tamil “சரிகமப” நிகழ்ச்சியில் கலக்கப்போகும் இலங்கை சிறுமி!

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!