பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸின் ‘ஃபௌஜி’ குறித்து புதிய அப்டேட்

பாகுபலி, கல்கி AD 2898 வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் இந்திய அளவில் பெரிய மார்க்கெட் உள்ள நடிகராக மாறியுள்ளார்.
இந்நிலையில் பிரபாஸ் மற்றும் இன்ஸ்டா பிரபலமான இமான்வி கதாநாயகியாக அறிமுகமாகும் ‘ஃபௌஜி’ என்ற பான் இந்திய திரைப்படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த திரைப்படத்தை சீதாராமம் திரைப்படத்தை இயக்கிய ஹனு ராகவபுடி இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் எர்நேனி மற்றும் ரவிசங்கர் இணைத்து தயாரிக்கின்றனர்.
இதன்படி குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 60% வரை முடிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இப்படத்தை 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் இல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)