பிரான்ஸில் யூத மத பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் யூத மதம் மீதான எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில் Lyon (Rhône) நகரில் யூத பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
லியோனின் 3 ஆம் வட்டாரத்தில் வசிக்கும் பெண் ஒருவரை நபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார்.
அடி வயிற்றுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்து மருருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த செயல் யூத-விரோத நோக்கத்தால் தூண்டப்பட்டிருக்கலாம் என லியோன் அரச வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் வீட்டின் கதவில் ஸ்வாஸ்திகா இலட்சணை வரையப்பட்டிருந்ததாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர்.
(Visited 10 times, 1 visits today)