அடேங்கப்பா கீர்த்தி சுரேஷ் கட்டிவந்த ஒரு புடவை இத்தனை லட்சமா?
இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்துக்கு கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புடவையின் விலை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தின் மூலம்தான் தமிழில் அவர் அறிமுகமானார்.
அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் கீர்த்தியின் அளவான நடிப்பும், அழகும் ரசிகர்களை கவர்ந்தது. இதனையடுத்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் திருமணம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில் அட்டகாசமான புடவையில் காட்சியளித்தார் கீர்த்தி.
இந்நிலையில் அந்தப் புடவையின் விலை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அந்தப் புடவையின் விலை கிட்டத்தட்ட மூன்று லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், என்னங்க இது எப்போதும் சிம்ப்பிளாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் மூன்று லட்சம் ரூபாய்க்கு புடவை எடுத்திருக்காங்களா என்று ஆச்சரியத்துடன் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.





