இலங்கை வைத்தியசாலைகளில் எழுந்துள்ள சிக்கல்!
இலங்கையின் பல வைத்தியசாலைகளில் கதிரியக்க கருவிகள் அணைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் மற்றும் இதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு என்பன செயல்படாத நிலை காணப்படுவதாகவும். கண்டி தேசிய வைத்தியசாலையின் இருதய வடிகுழாய் சிகிச்சைப் பிரிவு மற்றும் DSA இயந்திரம் மற்றும் சிறுநீரக கல் நசுக்கும் இயந்திரம் என்பன இடிந்து வீழ்ந்துள்ளன.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை பொது வைத்தியசாலைகளில் சி.டி ஸ்கேன் இயந்திரங்கள் இன்னமும் செயலிழந்த நிலையில் உள்ளன. காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் XRAY இயந்திரம் 06 மாதங்களாக செயலிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனால் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.