ஐரோப்பா செய்தி

UKவில் கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்!

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் பணியில் இருக்கும் போது 02 அல்லது 03 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்புகள் குறித்து அஞ்சுவதாக தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா ஆம்புலன்ஸ் அறக்கட்டளைகளைச் சேர்ந்த 1,100 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்றவர்களில்  40 சதவீதத்திற்கும் அதிகமானோர் உடல் ரீதியான தாக்குதல்களை எதிர்பார்க்கிறார்கள் என்றும், பாதிக்கும் மேற்பட்டோர் வாய்மொழி துஷ்பிரயோகத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் காலப்பகுதியில்  நான்கு பேரில் மூன்று பேர்  மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் (West Midlands) அம்புலன்ஸ் சேவை துணை மருத்துவர் ஒருவர் , கொண்டாட்டங்களின் போது அவசர சேவை ஊழியர்களைக் கருத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!