உயரமான கட்டடங்களில் ஏறும் சாகச வீரர் வாழ்வின் இறுதி நிமிடங்கள்! நெஞ்சை பதற வைக்கும் காடசி

உயரமான கட்டடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டு சாகசப் பிரியர், 68 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
30 வயதான ரெமி லுசிடி என்னும் அவர், சீனாவில் உள்ள ஹாங்காங்கில் ஒரு அடுக்குமாடியில் ஏறியபோது தவறி விழுந்துள்ளார்.
தனது நண்பரை காண வந்ததாகக் கூறி அவர் அந்த அடுக்குமாடிக்குள் நுழைந்திருக்கிறார். 68 ஆவது மாடியை அடைந்தபோது, கதவைத் தட்டி அங்கிருந்த பணிப் பெண்ணிடம் உதவி கோரியுள்ளார்.
ஆனால் அந்த பெண்ணோ அச்சத்தில் உதவ மறுத்து காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டார். அதற்குள் ரெமி லுசிடி கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்து லூசிட் கேமராவை போலீசார் கைப்பற்றினர். இதில் லூசிடியின் ஸ்டண்ட் வீடியோக்கள் உள்ளன.
(Visited 11 times, 1 visits today)