பொழுதுபோக்கு

Rolls Royce காரில் ரஜினிக்கு அமீரகத்தை சுற்றிக்காட்டிய Lu Lu தலைவர்

ஜெய்லர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த பட பணிகளை தொடங்கினார். அந்த வகையில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் “வேட்டையன்” என்கின்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார்.

தற்பொழுது அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள “கூலி” என்கின்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இடைப்பட்ட நாள்களில் ஓய்வெடுக்க அவர் அண்மையில் அமீரகம் சென்றிருந்தார். அங்கே அவர் பிரபல லு லு நிறுவனத்தின் தலைவர் யூசுப் அலி அவர்களை சந்தித்து உரையாடினார்.

அமீரகத்தில் உள்ள பல முக்கிய தொழிலதிபர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நட்பு ரீதியாக சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும் லு லு நிறுவன தலைவர் யூசுப் அலி, தனது மிரளவைக்கும் வெள்ளை rolls-royce காரில் சூப்பர் ஸ்டாரை அருகில் அமர வைத்து, அவரே அந்த வாகனத்தை ஓட்டிச் சென்று அவருக்கு அமீரகத்தில் சில இடங்களை சுற்றி காட்டியதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அரபு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் இடையே வர்த்தகத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றும் நபரான யூசுப் அலி, ரஜினிகாந்துடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் லு லு குழுமத்தின் CEO சைஃபி ரூபாவாலாவையும் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content