முன்னாள் ஜனாதிபதியின் மரணத்தில் தொடரும் மர்மம்… விசாரணையை தொடங்கியுள்ள ஈரான்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணத்தில் சந்தேகங்கள் நிலவுதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அவர் பயணித்த பெல் 212 ரக ஹெலிகாப்டர் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ள நிலையில் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
இதன் காரணமாக விபத்து தொடர்பில் ஈரான் பாதுகாப்பு படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏவுகணைத் தாக்குதலால் ஹெலிகாப்டர் முற்றாக எரித்து அழிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பலஸ்தீன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக தற்போது தாக்குதலில் ஈடுபடும் ஹூதி படைக்கு ஆதரவு வழங்கியமை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்டவை காரணமாக, மேற்குலகின் விமர்சனத்திற்கு உள்ளான ஈரான் ஜனாதிபதிக்கு கடும் உயிர் அச்சுறுத்தல் இருந்தமை யாவரும் அறிந்ததே.
(Visited 41 times, 1 visits today)