உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – எச்சரிக்கும் நிபுணர்கள்
665உலகம் இப்போது மீண்டும் மிரட்டலைச் சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கெடுபிடிப் போருக்குப் பிறகு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் இது தொடர்பில் அமெரிக்க, பிரித்தானிய வேவுத் துறைத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
உக்ரேனில் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளைத் தடுப்பதில் இரு நாடுகளும் இணைந்து நிற்பதாக அவர்கள் தெரிவத்தனர்.
பிரித்தானியாவின் MI6 அமைப்பின் தலைவர் ரிச்சர்ட் மோர், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறைத் தலைவர் வில்லியன் பர்ன்ஸ் இருவரும் முதன்முறையாக இணைந்து எழுதிய அறிக்கையில் அவ்வாறு கூறினர்.
உக்ரேனிய போர் வருவதை முன்கூட்டியே கணித்து அனைத்துலகச் சமூகத்துக்கு எச்சரிக்க முடிந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். உக்ரேனுக்கு உதவச் சில வேவுத் துறை ரகசியங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
இஸ்ரேல்-காஸா போர் மோசமடைவதைத் தடுக்கவும் IS பயங்கரவாத அமைப்பை ஒடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.