ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள தயாராகிறது சுதந்திரக் கட்சி!
அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் SLFP கட்சியும் தயாராகிவருகின்றது என்று அக்கட்சியின் உப தலைவர் விஜேதாச ராஜபக்ச Wijeyadasa Rajapaksa தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ அவசரமாக ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை.
முதலில் கட்சியை பலப்படுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
அடுத்து நடைபெறும் தேர்தல் சமரை எதிர்கொள்வதற்கு கட்சி தயாராகிவருகின்றோம். நாம் சமரை எதிர்கொள்வோம்.” எனவும் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.





