ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கையில் கோடாரியுடன் சாலையில் சுற்றிய பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

அவுஸ்திரேலிய பொலிஸாரல் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நியூகாசில் பகுதியில் இளம்பெண் ஒருவர் கையில் கோடாரி ஒன்றுடன் சாலையில் சென்று கொண்டு இருந்த பொதுமக்களை துரத்தி மிரட்டி வருவதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கையில் கோடாரியுடன் சுற்றித் திரிந்த பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சித்தனர்.

ஆனால் அந்த பெண் பொலிஸாரையும் கோடாரியால் தாக்க முற்பட்டதால் சம்பந்தப்பட்ட பெண்ணை எப்படியாவது விரைவில் கைது செய்ய வேண்டுமென்ற நோக்கில் பொலிஸார் ரப்பர் குண்டுகளை கொண்ட துப்பாக்கியால் அப்பெண்ணை சுட்டனர்.

nsw-siege-police-shot-krista-with-bean-bag-round: அவுஸ்திரேலியாவில் கையில் கோடாரியுடன் சுற்றிய பெண்: பொலிஸார் சர்ச்சைக்குரிய துப்பாக்கியை பயன்படுத்த தடை

சுடப்பட்ட அந்த ரப்பர் குண்டு பெண்ணின் மார்பு பகுதியில் பட்டதால் படுகாயமடைந்து அந்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.பின் உடனடியாக அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

பொலிஸாரின் ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த பெண் 47 வயதுடைய கிறிஸ்டா கேச் என தெரியவந்துள்ளது.இதற்கிடையில் பெண் ஒருவர் ரப்பர் குண்டு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் பொலிஸாரின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அத்துடன் சர்ச்சைக்குரிய ரப்பர் குண்டு துப்பாக்கிகளை பயன்படுத்த பொலிஸாருக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!