வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற தம்பதிக்கு நேர்ந்த கதி – கணவர் பலி
 
																																		தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் 42 வயதான வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ்ஸின் சாரதியின் நித்திரை மயக்கத்தால் அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸின் முன்பகுதியில் பயணித்த வெளிநாட்டு தம்பதியினர் விபத்தில் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கணவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்னதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
