பொழுதுபோக்கு

படப்பிடிப்பின் போது பிரபல நடிகைக்கு ஏற்பட்ட காயம்! சோகத்தில் ரசிகர்கள்

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் நடிகை லிஸி தம்பதியின் மகள் கல்யாணி பிரியதர்ஷன், தமிழில் ‘ஹீரோ’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின்னர் ‘புத்தம் புது காலை’ வெப் தொடர் மற்றும் சிம்புவின் ‘மாநாடு’ படத்திலும் நடித்துள்ளார். மேலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கல்யாணி பிரியதர்ஷன், ‘ஆண்டனி’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ஜோஷி இயக்குகிறார்.

இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத், விஜயராகவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றில் கல்யாணி பிரியதர்ஷன் டூப் போடாமல் நடித்துள்ளார். அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

 

(Visited 8 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content