தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு திருச்சபையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் – போப் ஆண்டவர்
உலகம் முழுவதும் கத்தோலிக்க திருச்சபையின் கதவுகள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் உட்பட அனைவருக்குமே எப்போதும் திறந்திருக்கும் என போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகலில் நடந்த ஒரு திருவிழாவில் பங்கேற்றுவிட்டு ரோம் திரும்பியபோது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,
“என்னுடைய உடல்நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறது. இருப்பினும் உடல் முழுமையாக சரியாகும்வரை வயிற்றில் பெல்ட் அணிவது கட்டாயமாகும். மூன்று மாதங்கள் வரை பெல்ட் அணிய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் தேவாலயங்கள் குறித்தும் பல கேள்விகள் எழுப்பப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபை எப்போதுமே தன் பாலின ஈர்ப்பாளர்கள் உட்பட அனைவருக்கும் திறந்திருக்கும்.
ஆனால் இங்கே வாழ்க்கை முறையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் இருப்பதால், இவர்களுக்கான திருமணங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இதனால் தன்பாலின ஈர்ப்பு கொடிய பாவம் என்பதல்ல. உலகில் அனைவருமே கடவுளை தங்களின் சொந்த வழியில் நேசிக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.