திடீரென மேடையில் வைத்து நடிகைக்கு 3 முறை முத்தமிட்ட இயக்குனர்..!
இயக்குனர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி இயக்கத்தில் ராஜ் தருண் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘திரகபாதர சாமி’. இந்த படத்தில் ராஜ் தருணுக்கு ஜோடியாக மன்னரா சோப்ரா நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தில் ராஜு இந்த டீசரை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் போது நடிகை மன்னரா சோப்ரா பக்கத்தில் இயக்குனர் ஏ.எஸ். ரவிகுமார் சவுத்ரி நின்று கொண்டிருந்தார்.
அப்போது அனைவரின் முன்பாக இயக்குனர் திடீரென நடிகைக்கு முத்தமிட்டார். இதனை சிறிதும் எதிர்பாராத நடிகை பதறி போனார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது





