வீழ்ச்சியடைந்து வரும் நெதர்லாந்தின் பொருளாதாரம்!
தொற்றுநோய்க்கு பிறகு நெதர்லாந்து பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் வீழச்சியடைந்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களிடையே முந்தைய மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.3% குறைந்துள்ளது என்று புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதன்படி இவ்வாண்டின் முதல் காலாண்டின் 0.4% வீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நெதர்லாந்து இப்போது பிரதம மந்திரி மார்க் ரூட்டின் ராஜினாமாவால் தூண்டப்பட்ட அரசியல் எழுச்சியுடன் பொருளாதார சரிவையும் எதிர்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர் பற்றாக்குறை, ஐரோப்பிய வர்த்தக பங்காளிகளிடமிருந்து முடக்கப்பட்ட தேவை மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயல்வதால் வட்டி விகிதங்களில் செங்குத்தான உயர்வு ஆகியவை பொருளாதர வீழச்சிக்கு முக்கிய பங்காற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.