இந்தியா

அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள்! அதானி குழுமம் உடனான திட்டங்களை ரத்து செய்த நாடு

அதானி மீது அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது.

இதன் விளைவாக இந்தியப் பங்குச்சந்தையும் நேற்று காலை முதல் கடும் வீழ்ச்சியை கண்டு சரிவிலே முடிந்தது.

இந்த நிலையில், அதானி நிறுவனங்களுடனான தொழில் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்த கென்யா அரசின் இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.

மேலும், அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் சுமார் 265 மில்லியன் டாலர்களை லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு வழங்க ஒப்புக் கொண்டதாக அந்த அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டை அடுத்து அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்தச் செய்தியை தொடர்ந்து அதானி க்ரீன் எனர்ஜி பத்திரங்கள் மூலம் சுமார் 600 மில்லியன் டாலர்களை திரட்டும் திட்டத்தை ரத்து செய்தது.

அதனைத் தொடர்ந்து, ‘இந்த குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள்’ என அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தனர்.

அதானி குழுமம் மீதான இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து கென்யா அதானி நிறுவனத்துடனான 2 தொழில் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது. அதன்படி, கென்யாவின் விமான நிலையத்தை பராமரிக்கும் ஒப்பந்தமும் மற்றும் 30 ஆண்டு காலத்துக்கு கென்ய எரிசக்தி துறையை நிர்வகிக்கும் 736 டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் என இரண்டு ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.

இந்த எரிசக்தி துறையை நிற்வகைக்கும் ஒப்பந்தமானது கடந்த மாதம் தான் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கென்யா அதிபர் ரூட்டோ பேசியபோது, “தற்போது அமலில் உள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு போக்குவரத்து அமைச்சகம் மற்றும் எரிசக்தி மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்”, என ரூட்டோ தெரிவித்துள்ளார்.

(Visited 46 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே