டொலருக்கு நிகரான அதிக மதிப்புள்ள நாணயத்தை அறிமுகப்படுத்த பிரிக்ஸ் கூட்டமைப்பு திட்டம்!
இந்த ஆண்டு நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், டொலருக்கு நிகரான தங்கத்தால் ஆன நாயணயத்தை அறிமுகப்படுத்த பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் கவனம் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த நாணயமானது டொலரில் இருந்து வேறுப்பட்டது எனவும் இது கடன் அடிப்படையிலான டொலருக்கு முற்றிலும் மாறாக அதிக மதிப்புள்ள நாணயமாக இருக்கும் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நாயணம் அறிமுகப்படுத்தப்பட்டால் பல நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்புடன் இணைய முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது.
தங்கத்தின் அடிப்படையிலான புதிய நாணயமானது வளரும் நாடுகளின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பாக புதிய பரிவர்த்தனையில் தங்கத்தின் மதிப்பைச் சேர்ப்பதன் மூலம் ஒற்றை நாணய அலகு பலப்படுத்தப்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.