டொனால்ட் ட்ரம்பை மீண்டும் அதிபராக்க ஆசைப்படும் அமெரிக்க மக்கள்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மற்றும் (Ron DeSantis) டிசாண்டிஸ் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் என்பிசி வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. இதில் 51% வாக்காளர்கள் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதிக்கான முதன்மைத் தேர்வாக டிரம்பைத் தேர்ந்தெடுத்துள்ளனர், 22% பேர் மட்டுமே டிசாண்டிஸைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
குடியரசுக் கட்சியின் முதன்மை வாக்காளர்களில் டொனால்ட் டிரம்ப் தனது போட்டியாளரான Ron DeSantis ஐ விட 29 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார். வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 7 வீதமானோர் மைக் பென்ஸைத் தேர்ந்தெடுத்துள்ளதுடன், நான்கு வீதமானோர் நிக்கி ஹேலியை தெரிவு செய்துள்ளனர்.
டொனால்ட் ட்ரம்பின் வீட்டில் இரகசிய ஆவணங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறி அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தியதை தொடர்ந்து குறித்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
“வரலாற்றில் முதன்முறையாக, முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அவருடைய நிலைப்பாட்டில் அது தாக்கத்தை ஏற்படுத்தியதற்கான அடையாளத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை” என்று இந்த ஆய்வை நடத்திய குடியரசுக் கட்சியின் கருத்துக்கணிப்பாளர் பில் மெக் இன்டர்ஃப் கூறியுள்ளார்.