அமெரிக்காவில் பாரிய ரயில் விபத்துகளுக்கு பின்னால் இருக்கும் நிர்வாகத் தோல்வி!
அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் 3,000 க்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் மனித தவறுகள் மற்றும் தண்டாவள குறைபாடுகள் காரணமாக இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துகளில் 23 இறப்புகள் மற்றும் கிட்டத்தட்ட 1,200 பேர் காயமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேரிலாந்து (Maryland) பல்கலைக்கழகத்தில் உள்ள ஹோவர்ட் (Howard) புலனாய்வு பத்திரிகை மையத்தின் பகுப்பாய்வில், இந்த தோல்விகளுக்குப் பின்னால் ஒரு சக்திவாய்ந்த துறை இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக கூட்டாட்சி ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் பெரும்பாலும் பாதுகாப்பு பரிந்துரைகளை புறக்கணித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சீர்திருத்தங்களை முறியடிக்க கூட்டாட்சி அரசாங்கம் அதன் செல்வாக்கைப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாதை ஆய்வு மற்றும் பழுதுபார்ப்பு தேவைகளைக் குறைக்கவும், பணியாளர்களின் சோர்வைத் தடுக்கும் நோக்கில் விதிகளை தளர்த்தவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் தவறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 முதல் 2024 வரை ரயில்வே கட்டுப்பாட்டாளர்களுக்கு 81 பரிந்துரைகள் வழங்கப்பட்டதாகவும், அவற்றில் 05 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





