பொன்னி சீரியலில் திடீர் என மாற்றப்பட்ட நடிகர்… இனி இவர்தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுக்குமே, இல்லத்தரசிகள் மத்தியிலும், இளம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் சுமார் 500 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் ‘பொன்னி’ சீரியலுக்கு தற்போது தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
இந்த சீரியலில் வைஷ்ணவி சுந்தர், பொன்னி என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்க, இவருக்கு ஜோடியாக சபரிநாதன் சக்திவேல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில், ரிஹானா, சூப்பர் குட் கண்ணன், வருன் உதய், கார்த்திக் சசிதரன், ஸ்ரீதேவி அசோக், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதல் சில வாரங்கள் மட்டுமே காட்டப்பட்ட பொன்னியின் அப்பா கதாபாத்திரம் மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளார். அதன்படி, முத்தையா கதாபாத்திரத்தில் நடித்து வந்த வின்சென்ட்-க்கு பதில், அழகு இனி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.