பொழுதுபோக்கு

அப்பாவை பார்க்க அமெரிக்காவில் இருந்து வந்த தளபதி – S.A.C எமோர்ஷனல் ட்வீட்

தந்தைக்கு ஆபரேஷன் என தெரிந்ததும் அமெரிக்காவில் இருந்து அவசர அவசரமாக கிளம்பி வந்த நடிகர் விஜய், எஸ்.ஏ.சி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடித்த லியோ படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் அதே வேளையில், அவர் தனது அடுத்த படமான தளபதி 68 பட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிற்காக அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தார் விஜய்.

அங்கு சில நாட்கள் தங்கி வெங்கட் பிரபு உடன் டெஸ்ட் ஷூட் நடத்திய விஜய், பின்னர் அவசர அவசரமாக சென்னைக்கு கிளம்பி வந்துள்ளார்.

நடிகர் விஜய் சென்னை திரும்பியதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு திடீரென இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டார்களாம்.

இதனால் அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்கிறது.

தந்தைக்கு அறுவை சிகிச்சை என தெரிந்த உடனே, நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து அவசர அவசரமாக கிளம்பி வந்திருக்கிறார்.

அமெரிக்காவில் இருந்து வந்த கையோடு, தந்தையை நேரில் சந்தித்துள்ளார் விஜய். நடிகர் விஜய் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோருடன் இணைந்து ஒன்றாக எடுத்துக்கொண்ட பேமிலி போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்க்கும், எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மோதல் இருப்பதாகவும், அதனால் அவர் தந்தையுடன் பேசுவதை நிறுத்திவிட்டதாகவும் பரவலாக பேசப்பட்டது. தந்தையுடன் சண்டையெல்லாம் இல்லை என்பதை சூசகமாக அறிவிக்கும் விதமாக விஜய், எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் என்கிற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/ActorVijayFC/status/1702010707464638873

https://twitter.com/Dir_SAC/status/1702169496855961885

 

 

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!