பொழுதுபோக்கு

ஜப்பானிலும் தளபதி… ஆட்டத்த பாருங்க…

தளபதி விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியாகியுள்ள படம் தி கோட். இந்தப் படம் இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

படத்தில் உள்ள நெகடிவ் கதபாத்திரமான ஜீவன் கதாபாத்திரம் மட்ட பாடல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் பாடலுக்கு ஜப்பான் ரசிகர்கள் நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

படம் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 126.32 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு எப்படி இந்தியாவைக் கடந்து மற்ற நாடுகளிலும் தீவிரமான ரசிகர்கள் இருக்கின்றார்களோ அதேபோல் தளபதி விஜய்க்கும் தீவிரமான ரசிகர்கள் உலகநாடுகள் முழுவதும் உள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து உலகநாடுகள் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் மட்டும் இல்லாமல், அங்குள்ள அந்த நாட்டு ரசிகர்களும் விஜய்யைக் கொண்டாடி வருகின்றனர்.

அப்படி ஜப்பானிலும் விஜய்க்கு தீவிரமான ரசிகர்கள் உள்ளனர். முதல் நாள் முதல் காட்சியை வெறித்தனமாக பார்த்து, தமிழ்நாட்டினைப் போல் விஜய் பட ரிலீஸின் போது திரையரங்கையே திருவிழாபோல் மாற்றிவிடுவார்கள்.

இந்த பாடலுக்கு த்ரிஷா நடனமாடியிருந்தார். பல ரசிகர்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த மூன்று பேர், மட்ட பாடலுக்கு விஜய் போலவே நடனமாடி இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இது மட்டும் இல்லாமல் இந்த வீடியோ இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்