பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு விஜய் இரங்கல்

பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பதிவிட்டுள்ளதாவது,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வத்திக்கான் நகரத்தின் இறையாண்மையாளருமான, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்த புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.
அவரது மறைவு அமைதியை விரும்புவோருக்கு ஒரு பெரிய இழப்பாகும்.
அவரைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா நித்திய சாந்தியடையட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
(Visited 3 times, 3 visits today)