ஆங்கிலக் கால்வாயில் அதிகரிக்கும் பதற்றம் – லேசர்களை காட்டி அச்சுறுத்தும் ரஷ்யா!
டோவர் ஜலசந்தி ( Dover Strait) மற்றும் ஆங்கிலக் கால்வாயில், ரஷ்ய போர் கப்பலின் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்ய கப்பல்களின் அச்சுறுத்தல் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) சமீபத்தில், ரஷ்ய உளவுக் கப்பலான யந்தர் (Yantar) இங்கிலாந்து கடல் எல்லைக்கு அருகே விமானிகளை நோக்கி லேசர்களைக் காட்டி அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
நாங்கள் உங்களைப் பார்க்கிறோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அச்சுறுத்தல்களை தொடர்ந்து வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக்கில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ராயல் விமானப்படை P-8 போஸிடான் ( P-8 Poseidon) விமானங்களை பிரித்தானியா அனுப்பிவைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





